பாரிமுனை, மண்ணடி பகுதிகளில் உள்ள விடுதி, கடையில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணம் சிக்கியது

தண்டையார்பேட்டை: பாரிமுனை பர்மா பஜார் பகுதியில் உள்ள ஈவினிங் பஜாரில் கடை நடத்தி வருபவர் முகமது இலியாஸ். இவருடைய கடையில் நேற்று மாலை 4 மணியிலிருந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையிலிருந்து ₹30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து 5 மணி நேரம் அங்கு சோதனை நடைபெற்றது. இதேபோல் மண்ணடி லிங்கி செட்டித் தெருவில் உள்ள கிரீன் பேலஸ், ஆப்பிள் பேலஸ் மற்றும் தம்பி செட்டி தெருவில் உள்ள ஆரஞ்சு பேலஸ் ஆகிய தங்கும் விடுதிகளிலும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. என்ஐஏ சோதனை நடைபெறுவதால் ஈவினிங் பஜார், மண்ணடி ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் பாரிமுனை, மண்ணடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்