தமிழகத்தில் சமூக பதட்டத்தை ஏற்படுத்தவே என்ஐஏ சோதனை: திருமாவளவன் குற்றச்சாட்டு

நெல்லை: ‘தமிழகத்தில் சமூக பதட்டத்தை ஏற்படுத்தவே என்ஐஏ சோதனை நடத்தப்படுகிறது’ என்று திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். தாமிரபரணியில் மாஞ்சோலை தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் உயிர் நீத்த நிகழ்வு நாளில் கொக்கிரகுளம் தாமிபரணி ஆற்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை வெறியாட்டத்தை ஒன்றிய, மாநில பாஜ அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. குக்கி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைக்கு ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுதான் காரணம்.

இந்த விவகாரத்தில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பேற்று பதவி விலக ேவண்டும். உலக அளவில் இந்தியா தலைகுனிந்து நிற்கும் நிலை மணிப்பூர் வன்முறையால் ஏற்பட்டுள்ளது. பெண்களை நிர்வாணப்படுத்திய கொடுமை நடந்து 2 மாதம் ஆகியும் பாஜ அரசு இந்த சம்பவத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. மணிப்பூர் முதலமைச்சரை கைது செய்து குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும். மணிப்பூர் சம்பவம் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நாளை (இன்று) நாடாளுமன்றத்தின்முன் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக சார்பில் ரவிக்குமார் எம்பி பங்கேற்பார். மதுரையில் நாளை(இன்று) எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நீதிமன்றத்தில் காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படம் தவிர வேறு படங்கள், சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைத்தவர், அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தவர் என்ற காரணத்தால் அம்பேத்கர் படம் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சமூக பதட்டம் மற்றும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோகத்தில் என்ஐஏ சோதனை என்ற முறையை பாஜ கையாளுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்