கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம் மாநகர காவல்துறையிடமிருந்து வழக்கு ஆவணங்கள் பெற்ற என்ஐஏ அதிகாரிகள்: ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் என தகவல்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு, கடந்த அக்டோபர் மாதம் 24ம் ேததி ரவுடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். பாதுகாப்பு பணியில் இருந்த கிண்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் ரவுடி கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதைதொடர்ந்து கருக்கா வினோத் மீது 9க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்ததால் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி கிண்டி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியது குறித்து தனியாக கடந்த நவம்பர் 14ம் தேதி வழக்கு பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இருந்தாலும், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை மாநகர காவல்துறையிடம் என்ஐஏ அதிகாரிகள் கேட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் வந்து துணை கமிஷனர் பொன் கார்த்திக் குமாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட கருகா வினோத்தின் வாக்குமூலம் அடங்கிய ஆவணங்களை பெற்றதாக என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஓரிரு நாட்களில் என்ஐஏ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்