லஞ்சப் புகாரில் என்.ஐ.ஏ. அதிகாரி விஷால் கார்க் பணியிடை நீக்கம்

டெல்லி: லஞ்சப் புகாரில் என்.ஐ.ஏ. அதிகாரி விஷால் கார்க்வை பணியிடை நீக்கம் செய்து ஒன்றிய உள்துறை உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரி விஷால் கார்க் அலுவலகத்துக்கும் உள்துறை சீல் வைத்தது. லஞ்சம் வாங்கிய புகாரில் அதிகாரி விஷால் கார்க் சஸ்பெண்ட் ஆவது இது 2-வது முறை. ஏற்கனவே 2019-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சஸ்பெண்ட் ஆகியுள்ளார். 2019-ம் டெல்லி தொழிலதிபர் ஒருவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரி விஷால் கார்க் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2007 சம்ஜவுதா, அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர் விஷால் கார்க். 2020-ல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு அதிகாரி விஷால் கார்க் மாற்றப்பட்டார்.

Related posts

ஜிகா வைரஸ் பரவல்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை

உத்தரப் பிரதேசத்தில் ஆன்மீக சொற்பொழிவு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 134 ஆக அதிகரிப்பு!!

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு