தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகத்தில் இன்று காலை 11 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னையில் சித்தலபாக்கம், வண்டலூர், வெட்டுவாங்கனி, திருவல்லிக்கேனி, ஏழுகிணறு, ராயப்பேட்டை, மற்றும் கன்னியாகுமரி என மொத்தம் 11 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. தரப்பில் மொத்தம் 2 வழக்குகள் பதிவு செய்யபப்ட்டுள்ளது. 9 பேர் கைதாகியுள்ளனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை 11 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை

பசும்பொன்னில் தேவர் குருபூஜையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி ஆய்வு

குமரியில் கன்னிப்பூ அறுவடை பணி தீவிரம்: நெல்லிற்கு நல்லவிலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி