தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஐகோர்ட்டில் அவசர முறையீடு!!

சென்னை : தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு அவசர முறையீடு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் முறையீட்டை பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாகக் கூறி என்ஐஏ சோதனை நடத்தியது. என்ஐஏ அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகி விளக்கமளிக்க அவகாசம் வழங்காமல் சோதனையில் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு