நெய்வேலி அனல்மின் நிலையத்தில் 632 அப்ரன்டிஸ்கள் : பி.இ.,/டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

பயிற்சிகள்:

1. Graduate Apprentices (Engineering): 314 காலியிடங்கள். பயிற்சி காலம்: ஒரு வருடம். துறைவாரியாக காலியிடங்கள் விவரம் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-75, எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்-78, சிவில்-27, இன்ஸ்ட்ருமென்டல்-15, கெமிக்கல்-9, மைனிங்-44, கம்ப்யூட்டர் சயின்ஸ்-47, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்-5, பார்மசி-14)
2. Diploma Apprentices (Technician Apprentices): 318 இடங்கள். பயிற்சி காலம்: ஒரு வருடம். (துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:(மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-95, எலக்ட்ரிக்கல்-94, சிவில்-49, இன்ஸ்ட்ருமென்டேசன்-9, மைனிங்-25, கம்ப்யூட்டர் சயின்ஸ்-38, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்-8).

தகுதி: அப்ரன்டிஸ் பயிற்சி வழங்கப்படும் பாடங்களில் கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு பி.இ.,/பிடெக் பட்டமும், டிப்ளமோ அப்ரன்டிஸ் பயிற்சிக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பையும் முடித்திருக்க வேண்டும். 2019, 2020, 2021, 2022,2023ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.டிப்ளமோ அல்லது பி.இ.,/பிடெக்கில் பெற்றுள்ள மதிப்பெண்கள,் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பிப்.6க்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 31.1.2024.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு