திருச்சியில் புதிய தில்லை மெடிக்கல் சென்டர்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

திருச்சி: திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகரில் புதிதாக அமைக்கப்பட்ட தில்லை மெடிக்கல் சென்டரை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகர் 3வது மெயின் ரோட்டில் புதிய உதயமாக தில்லை மெடிக்கல் சென்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. எம்.ரோஷன் ராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு கலந்து கொண்டு புதிய தில்லை மெடிக்கல் சென்டரை திறந்து வைத்தார். இதில் கே.என்.அருண் நேரு எம்.பி., மேயர் அன்பழகன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, மண்டலக் குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன், பகுதி செயலாளர் மோகன் தாஸ், கவுன்சிலர் முத்துச் செல்வம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, மண்டலத் தலைவர் தமிழ்ச் செல்வம், மாவட்டத் தலைவர் தர், மாநகரத் தலைவர் எஸ். ஆர். வி.கண்ணன், மாநில துணைத் தலைவர்கள் கே.எம்.எஸ். ஹக்கீம், சங்கரன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் துணைத் தலைவரும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவருமான தில்லை மெடிக்கல் கே. மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எம். ராமனாதன், தோல் நோய் சிகிச்சை நிபுணர் எஸ். விக்னேஷ் குமார் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர். இதில் தில்லை மெடிக்கல் குரூப்ஸ் நிறுவனத்தினர் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். புதிய தில்லை மெடிக்கல் சென்டரில் பிசியோதெரபி, எக்ஸ்ரே, லேப், மருந்தகம் வசதிகள் உள்ளது. அத்துடன் மாதந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துணைத் தலைவரும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவருமான தில்லை மெடிக்கல் கே. மனோகரன், ஜானகி மனோகரன் டாக்டர் ரோஷன் ராஜ் கீதாஞ்சலி ரோஷன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related posts

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை