புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல் நடக்கிறது18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 24ல் தொடக்கம்

புதுடெல்லி: 18வது மக்களவைக்கான தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதையடுத்து கடந்த 9ம் தேதி நரேந்திர மோடி 3ம் முறையாக பிரதமராக பதவியேற்று கொண்டார். அவரை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர். தொடர்ந்து கடந்த 10ம் தேதி அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு, அமைச்சகத்தில் உள்ள துறைசார்ந்த அலுவலகத்துக்கு சென்று அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர். இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதில், ‘‘18வது மக்களவைக்கான கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் 3 நாட்கள் புதிய உறுப்பினர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதேபோல் சபாநாயகர் தேர்வும் நடைபெறும். தொடர்ந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27ம் தேதி உரையாற்றுவார். இதைதொடர்ந்து பிரதமர் மோடி தனது அமைச்சரவையை நாடாளுமன்றத்துக்கு அறிமுகப்படுத்துவார். இதையடுத்து குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி