புதிய ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதற்கான தடையை நீக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு

மதுரை: புதிய ஆட்டோக்கள் இயக்க அனுமதி வழங்குவதற்கான தடையை நீக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதே போன்று வேறு ஒரு மனு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்குடன் சேர்த்து பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த ஏ.ஐ.டி.யூ.சி. ஆட்டோ தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் சித்திக் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் புதிய ஆட்டோக்களுக்கு பெர்மிட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. கள்ளச்சந்தையில் கிடைக்கும் பழைய ஆட்டோக்களின் பெர்மிட் மூலம் புதிய ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Related posts

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு

பைக்கில் குட்கா கடத்திய வாலிபர் கைது: 15 கிலோ, பைக் பறிமுதல்