புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் சங்கத்தில், 2024ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்கோட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் வழக்கறிஞர்கள் சங்கத்தில், நேற்று 2024ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. பின்னர் நேற்று மாலை வெளியான முடிவில், புதிய வழக்கறிஞர்கள் சங்க காப்பாளர் தீனதயாளன், தலைவர் வேல்முருகன், செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன், துணை தலைவர் சாந்தகுமார், துணை செயலாளர் சூர்யா (எ) சிலம்பரசன், நூலகர் ராஜ்குமார், தணிக்கையாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர், புதிய செயற்குழு உறுப்பினர்களாக கமலாகரன், வெஸ்லி, பி.எம்.சாமி, முருகன், பார்த்திபன், ராஜசேகர், வெற்றிதமிழன், செஞ்சிநாதன், பாலசுப்பிரமணியகுமார், சுரேஷ், சீனிவாசன், பொன்னுசாமி, முனுசாமி, இளங்கோவன், கணபதி, மகேந்திரன், வாசுதேவன், கன்னியப்பன், பிரகாஷ், இளங்கோவன், பழனி, சுரேஷ், சுந்தர்ராஜ், முனுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தலை சங்க தலைவர் சீனிவாசன் நடத்தி வைத்தார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!