புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வாக்காளர் அடையாள அட்டை ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் முகவரியில் இருந்தது. இம்மாத தொடக்கத்தில் ராஷ்டிரபதி பவன் சென்ற டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஜனாதிபதிக்கு டெல்லி முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில், டெல்லி முகவரியில் அவருக்கு நேற்று புதிய வாக்காளர் அடையாள அட்டை டெல்லி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. அதன்படி, அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை
previous post