புதுவையில் நடக்கும் ‘சீட் ரேஸ்’ அமைச்சரா ஆளுநரா?

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சியான பாஜ போட்டியிட சம்மத்தித்து உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்ருமான ரங்கசாமி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று ‘சாமி’ அருள் வாக்கு கேட்டு வந்து உள்ளார். இந்த தேர்தலில் வேட்பாளராக பாஜவை சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்தை நிற்க வைக்க வேண்டும் என்று முதல்வர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரோ தோற்றால் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்ற பயத்தால் எனக்கு அமைச்சர் பதவியே போதும் என்று தெறித்து ஓடுகிறார். ஆனால், நன்கு அறிமுகமான வேட்பாளர் யாரும் இல்லாததால் நமச்சிவாயத்திடம் டெல்லி பாஜ தலைமையும், முதல்வர் ரங்கசாமி தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இருப்பினும் அமைச்சர் நமச்சிவாயம் பிடிக்க கொடுக்கவில்லை. சமீபத்தில் தனது மனைவியுடன் ரங்கசாமி வீட்டுக்கு சென்ற நமச்சிவாயம், தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என கூறி என் பெயரை தலைமையிடம் பரிசீலிக்க வேண்டாம் என கெஞ்சி உள்ளார். இதனால், முதல்வர் ரங்கசாமி வேறு 2 பெயர்களை மனதில் வைத்து உள்ளாராம். இதை பாஜ தலைமை ஏற்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், புதுவை தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி அமித்ஷாவை சந்தித்த ஆளுநர் தமிழிசை, பாஜ தலைமையில் உள்ள தனது நெருங்கிய நண்பர்கள், மூத்த தலைவர்களை மூலம் வாய்ப்பு கேட்டு காய் நகர்த்து வருகிறாராம்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு