ரூ.1.18 கோடியில் கட்டப்பட்ட புதிய காவல் நிலையம் திறப்பது எப்போது?

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் மிகவும் பழைமை வாய்ந்து காணப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் கட்ட ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய கட்டிடம் மிகவும் பழையை வாய்ந்த கட்டிடம் இந்த காவல் நிலையம் சுற்றி புதர்மண்டி காணப்படுவதாலும் அருகே செங்கல்பட்டு கொளவாய் ஏரி இருப்பதாலும் பாம்பு, தேள், பூரான், எலி, கரப்பான் பூச்சு ,அட்டை பூச்சு என விஷ ஜந்துக்களுக்கு பஞ்சமில்லை.

எப்போதும், விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். தற்போது. மழை காலம் துவங்கியுள்ளதால் காவல் நிலையத்தில் கொசு தொல்லை அதிகமாகவே உள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களை பகல் நேரத்தில் கொசுகள் கடித்து தலை, கை, கால், உடம்பு என அனைத்து இடங்களும் வீங்கி விடுகின்றன. காவல் நிலையத்திற்க்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் பூச்சி கடித்தும், கொசுக்கள் கடித்தும் உடம்புகள் வீக்கமடைந்து வருகின்றது.

எனவே, காவல் நிலையம் செல்லும் காவலர்களும், புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் விஷ ஜந்துகளிடம் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய புதிய கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது திறக்கப்படும் என அனைவரும் எதிர்ப்பில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரனீத் தனி கவனம் செலுத்தி காவல் நிலைய புதிய கட்டிடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்