இந்திய ஜனநாயக புலிகள் மன்சூர் அலிகானின் புதிய கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு

புதுடெல்லி: தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்து அதனை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிவு செய்துள்ளார். தொடர்ந்து டெல்லியில் அவர் அளித்த பேட்டியில், ‘‘பொதுவாக நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. காலத்தின் சூழல் இப்போது நான் தனி கட்சி ஆரம்பித்து உள்ளேன். ஆரம்பத்தில் பல்வேறு போராட்டங்களில் நான் கலந்து கொண்டேன். அதனை அடிப்படையாகக் கொண்டு தான் தற்போது தனி கட்சி ஆரம்பிதுள்ளேன்.

இந்திய ஜனநாயக புலிகள் என்று எனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளேன். சுமார் 15 ஆயிரம் உறுப்பினர்கள் என் கட்சியில் உள்ளனர். வரும் 24ம் தேதி பல்லாவரத்தில் முதல் மாநாடு நடக்க உள்ளது. தேசிய அளவில் எனது கட்சி இயங்கும். மனித உரிமைகளை காக்கும் விதமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் தேசியத்துக்கு எதிராக கண்டிப்பாக இருக்காது. தமிழக மீனவர்களை இலங்கை அரசு துன்புறுத்துகிறது. அதனை கண்டித்து எனது கட்சியின் சார்பாக நடவடிக்கை எடுப்போம். வரும் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்