நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசியவர் குறித்து புதிய தகவல்

டெல்லி: நாடாளுமன்றத்தில் வண்ண புகைகுண்டு வீசிய மனோரஞ்சன் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மைசூருவை சேர்ந்த மனோரஞ்சன் இதற்கு முன் பழைய நாடாளுமன்றத்தை பார்க்கவும் பிரதாப் சிம்ஹா அலுவலகம் மூலம் அனுமதி சீட்டு பெற்றுள்ளார். இதன் காரணமாக புதிய நாடாளுமன்றத்திற்கு அனுமதி சீட்டு பெறுவது எளிதாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 மாதங்களுக்கு மேல் திட்டம் தீட்டியுள்ளனர் பகத்சிங் குறித்த புத்தகங்கள் மற்றும் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி