சம்பள பிரச்னை, பாலியல் குற்றச்சாட்டு: திரையுலகில் புதிய கமிட்டி அமைக்க முடிவு


சென்னை: திரையுலகில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க அனைத்து சங்கங்களையும் இணைத்து ஒரு கமிட்டி அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த கமிட்டி வாயிலாக, நடிகர்களின் சம்பள பிரச்னை, திரைத்துறை சார்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் கொடுத்த முன்பணம் மற்றும் இழப்புகள் தொடர்பான விவகாரம், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்களிடையே ஏற்படும் கதை திருட்டு விவகாரம், பாடல்கள் தொடர்பான காப்புரிமை பெறுவதில் சிக்கல், தொழிலாளர்களின் ஊதிய குறைபாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண முடியும் என தமிழ் திரையுலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த கமிட்டியில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து தலா 4 பேர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. விரைவில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது