நியோமேக்ஸ் மோசடி: துணை நிறுவன இயக்குநர்கள் கைது

மதுரை: மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்டோர் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன் உட்பட 27 பேரை கைது செய்துள்ளனர்.

17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகளை முடக்கப்பட்டுள்ள நிலையில், இதன் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்டிஸ் பி.லிட். மற்றும் டிரைடாஸ் பிராப்பர்டிஸ் பி.லிட்., நிறுவனங்களின் இயக்குநர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மேத்தா (42), டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவன இயக்குநர் மதிவாணன் (40) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் அசோக் மேத்தா, 400 பேரிடம் ரூ.60 கோடியும், மதிவாணன் 200 பேரிடம் ரூ.45 கோடியும் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆட்சியை இழக்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்?.. 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி முன்னிலை

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்