நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் கைது..!!

சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. இதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்டோர் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன் உட்பட 27 பேரை கைது செய்துள்ளனர்.

17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகளை முடக்கப்பட்டுள்ள நிலையில், இதன் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்டிஸ் பி.லிட். மற்றும் டிரைடாஸ் பிராப்பர்டிஸ் பி.லிட்., நிறுவனங்களின் இயக்குநர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மேத்தா (42), டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவன இயக்குநர் மதிவாணன் (40) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் அசோக் மேத்தா, 400 பேரிடம் ரூ.60 கோடியும், மதிவாணன் 200 பேரிடம் ரூ.45 கோடியும் மோசடி செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். பலகோடி ரூபாய் மோசடி செய்து சொத்து குவித்திருந்த அப்பர் ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Related posts

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது