நியோமேக்ஸ் நிதிநிறுவன முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க 3வது சிறப்பு முகாம் ஏற்பாடு..!!

சென்னை: நியோமேக்ஸ் நிதிநிறுவன முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க 3வது சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை, எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ பிரமுகரான வீரசக்தி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

முதலீடு செய்தால், இரட்டிப்பாக பணம் தரப்படும் எனக் கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி ஏராளமானோர் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடிக்கு அதிகமாகவும் முதலீடு செய்துள்ளனர். யாருக்கும் வட்டி தராமல் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக புகார் எழுந்தது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பாஜ பிரமுகர் வீரசக்தி உள்ளிட்ட இயக்குநர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் மீண்டும் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். இந்த மனுக்களின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, அரசு தரப்பு வாதத்தை ஏற்று அனைத்து முன்ஜாமீன் மனுக்களையும் 2வது முறையாக தள்ளுபடி செய்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவணங்களுடன் செப்டம்பர் 8 ல் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 8ம் தேதி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் மக்கள் புகார் அளிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்