நெல்லை, குமரி, தென்காசியில் திடீர் நில அதிர்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்களில் காணி இன மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கோதையாறு கொடுத்தற மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் 11.30 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அப்போது மக்கள் வீடுகளில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினர். சிலர் வீட்டில் உள்ள சுவர்களை பிடித்தவாறும், மரங்களைப் பிடித்தவாறும் நின்றுள்ளனர்.

கோதையாற்றில் மலையின் மறு பகுதியான நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி ஆகிய இடங்களிலும் நேற்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் தஞ்சமடைந்தனர்.

Related posts

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் பசுமை பூங்கா அமைக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு அன்புமணி வரவேற்பு!

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை!

தமிழ்நாடு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு!