நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என 400 ரவுடிகள் நெருக்கமாக கண்காணிப்பு!!

சென்னை : தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்ற நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருக்கும் ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர்களின் உத்தரவின் பேரில், 1750 பேர் கொண்ட ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 400 ரவுடிகள் மட்டுமே சிறையில் இருந்து வெளியே வெளிவந்துள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்கு ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என்ற அடிப்படையில் ஆணையிடப்பட்டது. 2 சிஃப்டுகளாக போலிசார் நியமிக்கப்பட்டு ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் மாவட்ட கண்காணிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரவுடிகள் போலீசாரால் இரவு பகலாக கண்காணிப்பட்டு ரவுடிகளின் முழு விவரம் குறித்த மொத்த தகவலையும் அறிக்கையாக சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதே நேரம் சிறையில் இருக்கக்கூடிய ரவுடிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு. அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி