நெல்லை மாவட்டத்தில் கனமழை வெள்ள நிவாரண நிதி ரூ.6000க்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கனமழை வெள்ள நிவாரண நிதி ரூ.6000க்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளத்தின் காரணமாக ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர். நெல்லையில் மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரண தொகையாக ரூ.6,000 வழங்கப்படும். இந்த 2 மாவட்டங்களின் இதர தாலுகாக்கள் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும், மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை வெள்ள நிவாரண நிதி ரூ.6000க்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் அதிக பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படுகிறது. அதன்படி, நெல்லை, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் ரூ.6000க்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4 வட்டங்களில் உள்ள 12 கிராமங்களில் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. ரூ.6,000 நவாரணம் பெற ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி