நெல்லை மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

திசையன்விளை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்ததையடுத்து நெல்லை மாவட்ட மீனவர்கள் பத்து நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இதைத்தொடர்ந்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 8,500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. பைபர் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு உவரி, கூடன்குளம், பஞ்சல், கூத்தங்குழி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்