நெல்லை மாநகராட்சி பகுதியில் கல்லூரி மாணவர்கள் குப்பைகளை அகற்றும் மெகா துப்புரவு பணி துவக்கம்

*அப்துல்வஹாப் எம்எல்ஏ, மேயர் (பொ) கே.ஆர்.ராஜூ பங்கேற்பு

நெல்லை : நெல்லை மாநகராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கல்லூரி மாணவர்கள் குப்பைகளை அகற்றும் மெகா துப்புரவு பணி நேற்று பாளையில் தொடங்கியது. இதில் அப்துல்வஹாப் எம்எல்ஏ, மேயர் (பொ) கே.ஆர்.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர்.தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாநகராட்சி முழுவதும் 55 வார்டுகளிலும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு குப்பைகள் அகற்றி தூய்மைப்படுத்தும் மாபெரும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி ராம் அன் கோ திட்டம் 51ஏ(ஜி) என்ற பெயரில் இம்முகாமை தொடங்கியது. தொடர்ந்து ஆறு மாதம், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற இருக்கிற இந்த மாபெரும் தூய்மைப்பணியின் முதல் நகர்வு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

நெல்லை அரசு சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணி மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வை 5வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ அப்துல் வஹாப் துவக்கி வைத்தார். நெல்லை மாநகராட்சி மேயர் (பொ) கே.ஆர். ராஜூ, அரசு சட்டக்கல்லூரி முதல்வர் டாக்டர் லதா, உதவி பேராசிரியர்கள் நாட்டு நலப்பணி அலுவலர்கள் சண்முகசுந்தரம், நாராயணி, 5வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன், கல்விக்குழு சேர்மன் பவுல் ராஜ், கவுன்சிலர் சின்னத்தாய் கிருஷ்ணன், மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் துபை சாகுல், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காசிமணி, மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி, சுசிமணி, வட்ட பிரதிநிதிகள் குணா, மகேஷ், பாளை சதீஷ், சட்டக்கல்லூரி அலுவலக பணியாளர்கள் சௌந்தரராஜன், கணேசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்திட்டத்திற்கான இயக்குனர் வேலாயுதம் தேவ் ஆனந்த், ராம் அன் கோ சார்பில் பாலா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு