நெலாக்கோட்டை சோலாடி பகுதியில் புதிய கான்கிரீட் சாலையால் கிராம மக்கள் மகிழ்ச்சி

 

பந்தலூர், ஏப்.27: நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சோலாடி பாண்டியன் காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறி மக்கள் நடந்து செல்வதற்கு முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நேற்று விடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நெலாக்கோட்டை ஊராட்சிமன்ற தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தலைமை வகித்தார், திமுக பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ் முன்னிலை வகித்தார், கவுன்சிலர் அறிவுமணி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நீண்டகாலமாக நடைபாதை இல்லாமல் சிரமப்பட்டு வந்த கிராமமக்கள் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்