நேரு கல்வி குழுமத்தின் பணி நியமன ஆணை வழங்கும் விழா

 

கோவை, ஏப். 27: கோவை நேரு கல்வி குழுமங்களின் சார்பில் ‘ரித்தி 2023’ என்ற மாணவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. இதில், 180க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. இதில், நேரு கல்வி குழுமங்களின், நேரு கார்ப்பரேட் பிலைஸ்மெண்ட் அண்ட் இண்டஸ்ட்ரி ரிலேஷன் துறை தலைவர் ரமேஷ் ராஜா வரவேற்றார். நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார். இதில், கல்லூரி முதல்வர் அனிருதன், நேரு இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் மணியரசன், நேரு இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் சிவராஜா, நேரு காலேஜ் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியின் முதல்வர் ரவிக்குமார், நேரு காலேஜ் ஆப் ஏரோனாடிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு