19ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமைதியான வழியில் போராட்டம்: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் பேட்டி

சென்னை: 19ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமைதி வழியில் போராட்டத்தை தொடர்வோம் என்று சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.

சென்னையில் நேற்று சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
19ம் தேதிக்குப் பிறகான பேச்சுவார்த்தையில் தற்போதைய கோரிக்கைகளையே வலியுறுத்துவோம். உடன்பாடு ஏற்படாவிட்டால் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற அமைதியான வழியில் போராட்டத்தைத் தொடர்வோம்.

தேவைப்பட்டால் மீண்டும் வேலைநிறுத்தம் நடைபெறும். புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது கோரிக்கையில் இருக்கிறது. ஆனால் தற்போது இருக்கும் பேருந்துகளைக் கூட போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களால் மட்டுமே இயக்க முடியும். அண்ணா தொழிற்சங்கத்தினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை. 6 கோரிக்கைகளை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி