நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் இந்தி நாளிதழ் நிருபர் கைது: ஜார்கண்ட்டில் சிபிஐ அதிரடி

அகமதாபாத்: ஜார்கண்டில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிக்கிய இந்தி நாளிதழ் நிருபரை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், முறைகேடு விவகாரம் தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சிபிஐ சோதனைகளை நடத்தி வருகிறது. பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த மனீஷ்குமார், அசுதோஷ் குமார் ஆகிய இருவரை கடந்த வியாழக்கிழமை சிபிஐ கைது செய்தது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக இதுவரை 6 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் நகரில் உள்ள ஓயாசிஸ் பள்ளியில் இருந்து வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பள்ளியின் முதல்வர் எசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இவர்கள் இருவருக்கும் முறைகேட்டில் உதவியதாக முகமது ஜமாலுதீன் என்ற இந்தி நாளிதழ் பத்திரிகையாளரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இதற்கிடையே நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜெய் ஜலாராம் பள்ளியில் நடந்த சோதனையை தொடர்ந்து 4 பேரை சிபிஐ கைது செய்தது. இவ்வாறாக நீட் முறைகேடு தொடர்பாக பலரை சிபிஐ கைது செய்துள்ளதால், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related posts

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு

போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்; 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு