நீட் முறைகேடு, ரயில் விபத்து மோடி ஆட்சியின் முதல் 15 நாட்கள்: பட்டியல் போட்டு ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் 15 நாட்கள்.
1. பயங்கரமான ரயில் விபத்து
2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள்
3. ரயில்களில் பயணிக்கும் அவல நிலை
4. நீட் ஊழல்
5. நீட் முதுகலை ரத்து
6. யுஜிசி நெட் வினாத்தாள் கசிந்தது
7. பால், பருப்பு வகைகள், எரிவாயு, கட்டணம் மற்றும் விலை அதிகம்
8. தீயால் எரியும் காடு
9. தண்ணீர் இல்லா நெருக்கடி
10. வெப்ப அலையில் சரியான முன்னேற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் இறப்புகள்

இதனால் உளவியல் ரீதியாக மோடி பின்னடைவில் இருக்கிறார். தனது அரசை காப்பாற்றுவதில் அவர் மும்முரமாக இருக்கிறார். மோடி மற்றும் அவரது அரசால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவின் வலுவான எதிர்க்கட்சி தனது அழுத்தத்தை எப்போதும் தொடரும், மக்களின் குரலை உயர்த்தும், பொறுப்புக் கூறாமல் பிரதமரை தப்பிக்க விடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு