நீட் விலக்கு நமது இலக்கு கையெழுத்து இயக்கம் தென்காசி மாவட்டம் முதலிடமாக இருக்க வேண்டும்; ஜெயபாலன் பேச்சு

 

சுரண்டை,நவ.11: நீட் விலக்கு நமது இலக்கு கையெழுத்து பெறுவதில் தென்காசி தெற்கு மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடம் ஆக இருக்க வேண்டும் என மாவட்ட சிறுபான்மை அணி நல பிரிவு கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் பேசினார்.சுரண்டையில் உள்ள அன்பகம் அலுவலகத்தில் மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இஞ்சி முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். தலைவர் விஸ்வா சுல்தான், துணை தலைவர் அந்தோணி மரியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ஏழை மாணவர்கள் நலனுக்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நீட் விலக்கே நமது இலக்கு என்று கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். நீட் தேர்வால் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து எடுத்துக்கூறி அதிகமான கையெழுத்து பெற்று தென்காசி மாவட்டம் தமிழகத்திலேயே அதிகமாக கையெழுத்தை பெற்ற மாவட்டமாக இருக்க வேண்டும்.நீட் தேர்வை ஒழித்து ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை உறுதியாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழியில் போராடுவோம் என பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் முகமது அலி ஜின்னா,யோவான் செல்வராஜ்,முகமது ஆதம் சுபேர், ஹக்கீம்,நாகூர் ஹனி,எட்வின்,லூர்து அற்புதராஜ்,முகமது இஸ்மாயில், முகைதீன் இஸ்மாயில், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்