நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமாரின் மகன் தனுஷ், 2021ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்து முடித்து, இரண்டு ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதி வந்தார். அதில், அவர் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கூலிவேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தனுஷ், தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது, அதிர்ச்சியையும் கவலையையும் தருகிறது. பட்டுக்கோட்டை மாணவன் தற்கொலைக்கு ஒன்றிய அரசே பொறுப்பேற்க வேண்டும். இனியும் அலட்சியப்படுத்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

Related posts

செப்டம்பர் 16: சர்வதேச ஓசோன் தினம்

பென்னாகரம் அருகே ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை, பட்டாக் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக நிர்வாகி கைது

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு