நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வழக்கை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 36 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மே மாதம் நடந்த நீட் தேர்வில் பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரியும் மறுதேர்வு நடத்தக் கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல் முடிவை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ்

நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி: 5 பேர் காயம்

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு