கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியீடு :முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைவு

டெல்லி : கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. நடப்பு ஆண்டு மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.அப்போது நடந்த விசாரணையில் 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அதில் பங்கேற்காதவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு முன்பு அவர்கள் பெற்று இருந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.

இதையடுத்து 7 மையங்களில் நீட் மறுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட 1563 பேரில் 813 பேர் பங்கேற்றதாக தேசிய தேர்வுகள் முகமையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட நீட் மறுதேர்வு முடிவுகளை http://exams.nta.ac.in/NEET இணைய தளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீட் மறுதேர்வில் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைந்தது. பழைய பட்டியலில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று இருந்த நிலையில், தற்போது 61 ஆக குறைந்தது. முழு மதிப்பெண்கள் பெற்ற 6 பேர் மறுதேர்வு எழுத தகுதிபெற்ற நிலையில், 5 பேர் மட்டுமே எழுதினர்.மறுதேர்வு எழுதிய 5 பேரும் 680 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற்றதால் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆக குறைந்தது.

Related posts

சென்னை தண்டையார்பேட்டையில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை தற்கொலை முயற்சிக்கு தூண்டிய புகாரில் மாவட்ட செயலாளர் கைது..!!

கலப்பு திருமணம்: சென்னை தியாகராயர் நகரில் பெண்ணை கிண்டல் செய்ததாக புகார்

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!