நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 30 மனுக்கள் மீது வரும் 8ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: நீட் தேர்வு மற்றும் அதில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக மட்டும் மொத்தம் 30மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற வழக்குக்கு ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், நீட் முறைகேடு தொடர்பான மனுக்கள் அனைத்தும் வரும் 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது. இதனால் நீட் தேர்வு விவகாரத்தில் அன்றைய தினம் எந்த மாதியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அமாவாசை முன்னிட்டு இன்றும், நாளையும் 1,065 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் கார்டியோவாஸ்குலர் டெக்னீஷியன்கள் பணி: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்