நீட் தேர்வு விவகாரத்தில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு கருத்துக்களை தெரிவிக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஆலந்தூர்: கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மூச்சு பயிற்சி, யோகா உள்ளிட்ட இயற்கை சார்ந்த மருத்துவ சேவை முதியோர்களுக்கு வழங்கும் வகையில் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மற்றும் கிண்டி கிங்ஸ் ஆகிய இடங்களில் தேசிய முதியோர் நல மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. 200 படுக்கைகளுடன் தற்போது மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் கட்டண படுக்கைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டண அடிப்படையில் நடுநிலை மக்களுக்கான கட்டண படுக்கைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்தும், அதற்கான விளக்கமும் திருப்திகரமாக இல்லை. நீட் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!