சென்னை : நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்துக்கு பா.ஜ.க.வை தவிர எஞ்சிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 3வது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.