கல்வித்துறை அமைச்சர் உறுதிமொழி ஏற்றபோது நீட் முறைகேட்டை கண்டித்து முழக்கம் : மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்த இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்

டெல்லி : 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னதாக மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 8 முறை எம்.பி.யாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடுக்குன்னில் சுரேஷ்க்கு பதிலாக 7 முறை எம்.பி.யாக இருக்கும் பர்துஹரியை இப்பதவிக்கு நியமனம் செய்தததை கண்டித்து பதவியேற்பு விழாவை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அவை கூடியதும், மக்களவை விதிகளின்படி முதல் உறுப்பினராக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

மோடி பிரதமராக உறுதிமொழி ஏற்கும் போது, ஆராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி எதிர்ப்பு காட்டினார். மேலும் அமைச்சர்களுக்கும் பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுக்கும் தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். திமுக எம்பிக்கள் நாளை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனிடையே உறுதிமொழி ஏற்க வருமாறு மக்களவை இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை சில மூத்த எம்.பி.க்கள் நிராகரித்தனர். கொடிக்குள்ளில் சுரேஷ், டி.ஆர்.பாலு ஆகியோரை உறுதிமொழி ஏற்க வருமாறு இடைக்கால சபாநாயகர் அழைப்பு விடுத்தார். ஆனால் இடைக்கால சபாநாயகர் அழைப்பை மூத்த எம்.பி.க்களான கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பால நிராகரித்தனர். மேலும் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி.யாக உறுதிமொழி ஏற்றபோது நீட் முறைகேட்டை கண்டித்தும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் எம்பிக்கள் முழக்கம் செய்தனர்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்