நீட் தேர்வு மோசடி: மேலும் ஒருவர் கைது

புதுடெல்லி: நீட் தேர்வு மோசடி தொடர்பாக மேலும் ஒருவரை மகாராஷ்டிராவில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வு கேள்வித்தாள் வெளியாகி உள்ளது. மேலும் முறைகேடுகள் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து பீகார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக மகாராஷ்ராவில் லத்தூரில் முறைகேடு செய்த நஞ்சுநேதப்பா என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்