கடந்த மே.5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: குஜராத் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு


புதுடெல்லி: இளநிலை மருத்துவ படிப்பில் சேர நடப்பாண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டு, ஜூன் 4ம் தேதி தேர்வு முடிவுகள் வௌியாகின. இதில் வினாத்தாள் கசிவு, ஒரேதேர்வு மையத்தை சேர்ந்த பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றது, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அரங்கேறி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

முறைகேடுகளுடன் நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு முறைகேடுகள் குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் வரும் 8ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “கடந்த மே.5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய கூடாது. நீட் கலந்தாய்வு நாளை முதல்(ஜூலை 6 முதல்) நடைபெற உள்ளது. இதுபோன்ற சூழலில் நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்தால் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விடும்” என்று தெரிவித்துள்ளனர். இந்த மனுவும் வரும் 8ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு