நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற ஒரு மாணவி, குஜராத் மாநில கல்வி வாரியம் நடத்திய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேதியியல் பாடத்தில் 31 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 21 மதிப்பெண்களும் பெற்று தோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து துணை தேர்வுகளை மீண்டும் எழுதிய அந்த மாணவி, வேதியியல் பாடத்தில் 33 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும், இயற்பியல் பாடத்தில் 22 மதிப்பெண் மட்டுமே எடுத்து மீண்டும் தோல்வியடைந்துள்ளார். இதிலிருந்து ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

Related posts

குரங்கம்மை நோய் தடுப்பு குறித்து மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்