நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 24 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் சிபிஐ விசாரணை அவசியம் என்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதம் வைத்தார். கோட்டாவில் பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதையும் மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேவையற்ற உணர்ச்சிகரமான வாதங்கள் தேவையில்லை என்று கருத்து தெரிவித்தனர். சிபிஐ விசாரணை கோரும் வழக்கை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்