வேப்பம் பூ காரக்குழம்பு

தேவையானவை:

வேப்பம் பூ – காய்ந்தது – 1
குழிகரண்டி, கறிவேப்பிலை – 1 கைப்பிடி,
கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா 2 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 10,
தனியா – 4 ஸ்பூன்,
அரிந்த வெங்காயம் – 100 கிராம்,
பூண்டு – 50 கிராம்,
தக்காளி – 100 கிராம் (அரைத்தது),
புளி கரைசல் – 2 கப் (தண்ணியாக),
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்,
உப்பு – சுவைக்கு,

தாளிக்க:

கடுகு, சீரகம், வெந்தயம் – தலா 1 ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வறுக்க சொன்ன பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து அத்துடன் காய்ந்த வேப்பம் பூவை சேர்த்து வறுத்து, கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் தாளித்து 2 காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு அதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை வதக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, தக்காளி விழுது, புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் பொடித்த வேப்பம் பூ பொடி சேர்த்துக் கிளறி எண்ணெய் விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கினால் வேப்பம் பூ காரக்குழம்பு ரெடி. இது பித்தத்திற்கு நல்லது.

 

Related posts

காலிஃபிளவர் புலாவ்

சிக்கன் சுக்கா

முட்டை ஸ்டப்டு பூரி