நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சியில் ₹5 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

*குடிநீர், வடிகால், சாலை அமைப்பு தீவிரம்

*தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு

நீடாமங்கலம் : நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சியில் ரூ.5.28 கோடியில் குடிநீர், வடிகால், சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பல்வேறு திட்டங்களில் தார் சாலை, பேவர் பிளாக் சாலை,சிமெண்ட் சாலை, குடிநீர் திட்டம், வடிகால் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இந்த பேரூராட்சியில் 2021-2021ம் ஆண்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தில் விஐபி நகர், காமராஜர் நகர், பாலாஜி நகர், திரவுபதியம்மன் கோயில் தெரு, பழைய நீடாமங்கலம் மேல மற்றும் கீழத், தெரு விரிவாக்கம் வரையில் ரூ.104 லட்சத்தில் பணிகள் நடைபெறுகிறது. 2021-2022ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் காமராஜர் சாலை முதல் வேதாத்திரி நகர் வரை ரூ.81 லட்சம் மதிப்பிலான சாலை பணி நடை பெறுகிறது.

2022-2023ம் ஆண்டிற்கான கோரையாறு லயன் கரை (வலது), கூயவர் தெரு வடிகால், வீரனார் கோயில் சந்து சாலையை ரூ.40.75 மதிப்பிலான பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியும், மேலும் கே.என்.எம்.டி 2022-2023 ஆம் ஆண்டு திட்டத்தில் ரூ.69.90 லட்சம் மதிப்பிலான நீடாமங்கலம் பேரூராட்சி குறுக்குத் தெரு, புதுத் தெரு விரிவாக்கம், 2வது குறுக்குத் தெரு,வி.ஜி.ஆர்.நகர் ,பாலாஜி நகர் 2வது தெரு ஆகிய இடங்களில் பழுதான சாலைகளை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணி நடை பெறுகிறது.

கே.என்.எம்.டி 2022-2023ம் ஆண்டில் ரூ.197.81 லட்சத்தில் நீடாமங்கலம் பேரூராட்சி பாப்பையன் தோப்பு விரிவாக்கம், ராகுல் நகர் 1 வது தெரு, பழையநீடாமங்கலம் அக்கஹாரம் விரிவாக்கம், நாடார் தெரு விரிவாக்கம் ,காமராஜர் கநர் 6வது குறுக்குத் தெரு, குளம் கீழ்கரை, நியர் ஜீட் பள்ளி, மன்னை ரோடு, அப்துல் ரஜாக் நகர், கன்னித் தோப்பு விரிவாக்கம், புதுத் தெரு, தைக்கால் தெரு ஆகிய தெருக்களை பேவர் பிளாக் சாலையாக அமைத்தல் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் நீடாமங்கலம் பேரூராட்சியில் என்.எஸ்.எம்.டி திட்டம் 2022-2023ம் ஆண்டில் ரூ.102.60 லட்சத்தில் வார்டு 5 ல் காமராஜர் நகர் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சிமெண்ட் சாலையாக அமைத்தல் பணியும் நடைபெறுகிறது. மேலும் எஸ்.எஃப்.சி 2022-2023ம் ஆண்டில் ரூ.85.35 லட்சத்தில் வார்டு 5ல் காமராஜர் நகர் மற்றும் காமராஜர் காலணி, பழைய நீடாமங்கலம் புதுத்தெரு, குளம் கீழ்கரை அரசு உயர்நிலைப்பள்ளி வரை பழுதடைந்த சாலைகளை தார் சாலைகளாக அமைத்தல் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது.

மேலும் 15வது நிதிக்குழு மான்ய திட்டம் 2022-2023ம் ஆண்டிற்கு ரூ.31 லட்சத்தில் பேரூராட்சி பகுதிகளில் குடி நீர் திட்டம்,வடிகால் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளும் உள்ளிட்ட நீடாமங்கலம் முதல்நிலை பேரூராட்சி பகுதிகளில் 12 பணிகள் ரூ.527.41 லட்சங்கள் மதிப்பீட்டில் நடந்து வருகிறது.இந்த பேரூராட்சியில் நடைபெரும் பணிகளில் சில பணிகள் நடந்து முடிந்துள்ளது. சில பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்து பேரூராட்சி தலைவர் ராமராஜ், செயல் அலுவலர் கங்காதரன், துணைத்தலைவர் ஆனந்தமேரி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொறியாளர், அலுவலர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்போடு நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் நினைவிடத்துக்கு அமைதி பேரணி

உதகை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

கலைஞர் வழியில் உழைத்து மீண்டும் திராவிட மாடல் அரசை அமைக்க இந்நாளில் உறுதியேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு