நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி

கோவை: ‘மாணவர்களின் கருத்தை கேட்டு நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்’ என்று பிரேமலதா தெரிவித்து உள்ளார்.  கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராயத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அரசு, ஆட்சியாளர்கள், காவல்துறை, மக்கள் என அனைவரும் இணைந்தால்தான் இது சாத்தியமடையும். உண்மையிலேயே அந்த காலத்தில் இருந்து கள் என்பது விவசாயத்தையும் ஊக்குவிக்கிறது.

கள் மிகவும் நல்லது. உயிர் கேடு எதுவும் இருக்காது. உடலுக்கு மிகவும் நல்லது என்ற ஒரு கருத்து உள்ளது. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என ஆரம்பம் முதல் சொல்லி கொண்டுள்ளோம். ஒன்றிய அரசு நீட் தேர்வை நாங்கள் எடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அனைத்து மாணவர்களின் கருத்தைக் கேட்டு நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை கேட்டு ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை