சென்னை அடுத்த புழல் அருகே வாட்ஸ்-அப்பில் லிங்க் அனுப்பி கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 1.26 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அடுத்த புழல் அருகே வாட்ஸ்-அப்பில் லிங்க் அனுப்பி கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 1.26 லட்சம் பணத்தை மோசடி கும்பல் நூதனமாக திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழல் அருகே காவாங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் சென்னை காவல்துறையில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார்.

இவரது வாட்ஸ்-அப் செயலில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஸ்டேட்மெண்ட் பார்ப்பதற்கு இந்த இணைப்பை பயன்படுத்துங்கள் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த இணைப்பிற்குள் சென்ற ராஜ்குமார் அந்த செயலியல் கேட்ட விவரங்களை பதிவு செய்திருக்கிறார்.சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் கிரெடிட் கார்டில் இருந்து சிறிது சிறிதாக என ரூ. 70 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டிருப்பதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அப்போதுதான் மோசடி இணைப்பில் சென்று பணத்தை இழந்த ராஜ்குமார் தனது பணத்தை மீட்டு தருமாறு புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.இதை போன்று புத்தகரம் ரேவதி நகரை சேர்ந்தவர் சபரிநாதன் என்பவரின் வாட்ஸ்-அப் லிங்க் அனுப்பி மோசடி கும்பல் ரூ. 56,000 சுருட்டியுள்ளது. இருவேறு சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!