நாயக்கன்பேட்டை ஊராட்சியில் இடிந்துவிழும் நிலையில் காணப்படும் ஊராட்சி கட்டிடம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்பேட்டை ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஆரம்பப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. இவை மட்டுமின்றி ஆரம்பப்பள்ளியின் எதிரே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது கட்டிடம் முழுவதும் ஆங்காங்கே சிதலமடைந்து முழுவதும் விரிசல்கள் ஏற்பட்டு, மேல்தள சுவர்கள் பெயர்ந்து விழுகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால், கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மாதந்தோறும் நடத்தப்படும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கூட்டங்களும் இங்கு நெருக்கடியில் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை புதிய அலுவலகம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. எனவே, வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் தற்போது கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் போன்று, அனைத்து வசதிகளும் கூடிய புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை இங்கு கட்டித்தர வேண்டும் என கிராம மக்களும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை