கடற்படையில் இசைக்கலைஞர் : 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

இந்திய கடற்படையின் இசைப்பிரிவில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்களை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

திட்டத்தின் பெயர்:

Agniveer (MR) (Musician) (02/2024) Batch.

சம்பளம்: முதல் வருடம் ரூ.30 ஆயிரம், 2ம் வருடம் ரூ. 3 ஆயிரம், 3ம் வருடம் ரூ. 36,500, 4ம் வருடம் ரூ. 40 ஆயிரம்.வயது: 01.11.2003க்கும் 30.04.2007க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்திய இசையில் முறையான பயிற்சி பெற்று ஏதாவதொரு இசைக் கருவியை சிறப்பாக வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

உயரம்: ஆண்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீ., இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கிலோ மீட்டர் தூரத்தை 6½ நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 20 ஸ்குவாட்ஸ், 12 புஷ்அப்கள் எடுக்க வேண்டும். பெண்கள் 1.6 கி.மீ., தூரத்தை 8 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். 15 ஸ்குவாட்ஸ், 10 சிட்அப்கள் எடுக்க வேண்டும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 4 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். கடற்படை பயிற்சி ஓடிசாவிலுள்ள ஐஎன்எஸ் சில்கா கடற்படை தளத்தில் நவம்பரில் தொடங்கும்.

கட்டணம்: ரூ. 60/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 11.07.2024.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது