கடற்படையில் இலவச பி.டெக்.,படிப்புடன் வேலை

பணி: Officer (Executive & Technical Branch): மொத்த காலியிடங்கள்: 40.
வயது: 02.07.2005க்கும் 01.01.2008க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.
தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் பிளஸ் 2 படித்து குறைந்தது 70% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் JEE Main-2024 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE Main Exam-2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பெங்களூரு, விசாகப்பட்டினம், கொல்கத்தா, போபால் ஆகிய மையங்களில் செப்டம்பரில் நடைபெறும்.

நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இந்திய கடற்படையால் வழங்கப்படும் இலவச பி.டெக்., படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பு 4 ஆண்டு கால அளவினைக் கொண்டது. பி.டெக்., படிப்பில் Applied Electronics, Mechanical, Communication, Electronics ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பொறியியல் பிரிவை தேர்வு செய்து படிக்கலாம். கேரளா, எழிமலாவிலுள்ள இந்திய கடற்படை கல்லூரியில் 4 வருட படிப்பு வழங்கப்படும்.இந்தப் படிப்புக்கான அனைத்து செலவுகளும் இந்திய கடற்படையால் வழங்கப்படும். படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியமர்த்தப்படுவர்.
www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2024.

Related posts

சாலைகளில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகையை உயர்த்தியதால் பலனில்லை: ஒன்றிய அமைச்சர் கவலை

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பலாத்கார தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பு: மேற்குவங்க அரசியலில் பரபரப்பு

கந்திகுப்பம் அருகே அரசு அலுவலர், மனைவியை கட்டி போட்டு நகைகள், பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை