சீன பாதுகாப்பு அமைச்சராக கடற்படை தளபதி நியமனம்

பீஜிங்: சீன கடற்படையின் தளபதி டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் லீ சாங்பூ அண்மையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சீன கடற்படையின் தளபதியான டோங் ஜன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். டோங் ஜன்னை பாதுகாப்பு அமைச்சராக நியமிப்பதற்கு சீன அதிபர் ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

டோங் ஜன், சீன ராணுவத்தின் கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த லீ சாங்பூ கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி பீஜிங்கில் நடந்த ஆப்ரிக்க நாடுகள் உடனான பாதுகாப்பு மாநாட்டில்தான் கடைசியாக பொதுவெளியில் தோன்றினார். அதன் பிறகு அவரை காணவில்லை.  அதே போல், கடந்த ஜூலையில், வெளியுறவு அமைச்சர் கின் கங் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருவரின் பதவி பறிப்புக்கான காரணம் பற்றி தகவல் வெளியிடப்படவில்லை.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!